மனைவியின் விசுவாச அரிக்கை

1.கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.ஏசாயா 58:11

2.உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.சங் 128:3

3.நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். ஆதி 17:16

4.பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.ஆதியாகமம் 2:18

5.என் கனவன் என்னை நேசிப்பார், என்னாலே ஆறுதலைடைவார். ஆதியாகமம் 24:67

6.என் கனவர் விதைத்த‌ விதையை கர்த்தர் ஆசீர்வதிகிரார்; கர்த்தர் ஆசீர்வதித்ததினால் என் கனவர் நூறுமடங்கு பலன் அடைந்து ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானார். ஆதியாகமம் 26:12,13

7.கர்த்தர் எனக்கு துணையாயிருப்பார்; அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் என்னை ஆசீர்வதிப்பார்.ஆதியாகமம் 49:25

8.என் கர்ப்பத்தின் கனியும், என் நிலத்தின் கனியும், என் மாடுகளின் பெருக்கமும், என் ஆடுகளின் மந்தைகளுமாகிய என் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.என் கூடையும், மாப்பிசைகிற என் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உபாகமம் 28:4,5

9.நான் தேவனுக்குப் பயந்ததினால், என்னுடைய குடும்பம் தழைக்கும்படி செய்தார்.யாத்தி 1:21

10.ஸ்திரீகளுக்குள்ளே நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.நியாயா 5:24

11. என் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் எனக்குக் கட்டளையிடுவார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த எனக்கு அவராலே நிறைவான பலன் கிடைக்கும்.ரூத் 2:12

12.இயேசு,’எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள்..உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ என்று சொன்னது போல நான் என் குழந்த்தைகளுக்கு கண்ணீருடன் ஜெபம் பன்னுவேன். லூக்கா 23:28

13.கர்த்தராலே நான் என் கனவனுக்கு புத்தியுள்ள மனைவி. நான் கர்த்தராலே அவருக்கு அறுளப்பட்ட‌ ஈவு.நீதி 19:14

14. வீட்டிலிருக்கும் ஸ்திரீயான நான் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டேன். வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பேன். சங் 68:12,13.

15. என் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், என் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருக்கும்.சங் 122:7

16. அவர் என் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, என்னிடத்திலுள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.என் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் என்னைத் திருப்தியாக்குகிறார்.சங் 147:13,14

17. குணசாலியான ஸ்தீரீயாகிய நான் என் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறேன்.நீதி 12:4

18. நான் புத்தியுள்ள ஸ்திரீ, என் வீட்டைக்கட்டுகிறேன்.நீதி 14:1

19. என் கனவர் என்னை கண்டடைந்ததினால் நன்மையானதைக் கண்டடைகிறார்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறார்.நீதி18:22

20.என் புருஷனுடைய இருதயம் என்னை நம்பும்; அவர் சம்பத்துக் குறையாது. நான் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவருக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறேன். நீதி 31:11,12

21.என் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவராயிருக்கிறார்.நீதி 31:23

22.என் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறேன்; தயையுள்ள போதகம் என் நாவின்மேல் இருக்கிறது. நீதி 31:26

23.நான் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், என் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறேன்.நீதி 31:27

24.என் கைகளின் பலன் எனக்கு கிடைக்கும்; என்னுடைய செய்கைகள் வாசல்களில் என்னைப் புகழ்வார்கள்.நீதி 31:31

25.இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.ஏசாயா 8:18

26. ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். ஆபகூக்3:19

27.கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிகிரதினால், நானும் என் வீட்டாரும் இரட்சிக்கப்பட்டுவிடோம்.அப்போ 16:31

28.மனைவியாகிய நான், கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, என் சொந்தப் புருஷனுக்குங் கீழ்ப்படிருக்கிரேன்.எபே 5:22

29.நான் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருபேன்.யாக்கோபு1:19

30.கர்த்தருக்குள் நான் எப்பொழுதும் சந்தோஷமாயிருபேன்; சந்தோஷமாயிருபேன் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.பிலி4:4

31. நான் உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருக்கிரேன்.பிலி 4:8

32.என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.பிலி 4:13

33.பயபக்தியோடுகூடிய என் கற்புள்ள நடக்கையை என் கனவன் பார்த்து,போதனையின்றி, நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்பட்டுவிட்டார்.I பேதுரு 3:1,2

34.எங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நாங்களும் எங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருப்போம்.Iபேதுரு1:15

35. அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே என்னுடைய‌ அலங்காரமாயிருக்கிறது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.Iபேதுரு3:4

36. ஏற்றகாலத்திலே தேவன் என்னை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருபேன்.Iபேதுரு5:6

37. அவர் என்னை விசாரிக்கிறவரானபடியால், என் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிட்டேன்.Iபேதுரு5:7

38. நான் என்னை தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும்,அலங்கரித்டுக்கொள்வேன்.I தீமோ2:10

39.நான் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்வேன்.I தீமோ2:11

40.நான் புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தாமலும், அமைதலாயிருப்பேன்.I தீமோ2:12

41.பாலிய ஸ்திரீஆகிய நான் என் புருஷனிடத்திலும், என் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவளாயிருப்பேன்.தீத்து2:4

42. என் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; என் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். ஏசாயா 54:13

43. கர்த்தர் எனக்கு பிரயோஜனமாயிருக்கிறதை போதித்து, நான் நடக்கவேண்டிய வழியிலே என்னை நடத்துகிறார். நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காட்டுவார்; என்மேல் அவர் கண்ணை வைத்து, எனக்கு ஆலோசனை சொல்லுவார்.ஏசா48:17;சங்32:8

44.கர்த்தர் மகிமைபடும்படி என் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.ஏசா60:21

45.நான் தேவனுடைய ஆலயமாயிருக்கிறேனென்றும், தேவனுடைய ஆவி என்னிடத்தில் வாசமாயிருக்கிறாரென்றும் அறிந்திருக்கிறேன்.I கொ3:16

46.என் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, என் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே எனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; என் துக்கநாட்கள் முடிந்துபோயிற்று.ஏசா60:20

47.அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல என் வெளிச்சம் எழும்பி என் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து என் நீதி எனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை என்னைப் பின்னாலே காக்கும்.ஏசா58:8

48.தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.சங்18:28

49.சமாதானத்தின் தேவன் தாமே எங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி இயேசுகிறுஸ்த்துவின் இரத்ததாலே காக்கப்படும்.I தெச5:23

50.என் பிள்ளைகள் எழும்பி, என்னைப் பாக்கியவதி என்பார்கள்; என் புருஷனும் என்னைப் பார்த்து ‘அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள்’ என்று புகழுவார். நீதி31:28,29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)